கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஆர்ட் ஆப் லிவிங் சார்பில் "கோயமுத்தூர் யோகத்தான் 2017" என்னும் யோகா பயிற்சி சுவாமி ஞானடேஜ் தலைமையில் நடைபெற்றது.

கோயமுத்தூர் யோகத்தான் 2017, இந்த யோகா பயிற்சி முக்கிய நோக்கமாக பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு அதனை அவர்கள் வீடுகளில் தினமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும், இதனை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தும் மனிதர்களின் வாழ்க்கை வழிமுறைகளில் யோகா பயிற்சி தொடர்ந்து, யோகா வழிமுறையை பின்பற்றவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த கோயமுத்தூர் யோகாத்தான் ஜனவரி 8, 9, 10 மற்றும் 11 ஆகிய நான்கு நாட்கள் காலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக இந்த யோகா பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது. இன்று காலை நடைபெற்ற யோகா பயிற்சியில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.
